கோலாலம்பூர், செப்டம்பர் 03-
நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸின் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கு தேவையான ஏற்புடைய நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் நடைபெறும் அமைச்சவைக்கூட்டத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் குறித்து அதிகமாக பேசப்படுகிறது.
தற்போது பலரின் விவாதப்பொருளாக மாறியுள்ள மலேசிய ஏர்லைன்ஸை பாதுகாப்பதற்கும், அதனை மீட்சி அடைய செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் உறுதி அளித்தார்.