உதவி இயக்குநர் உட்பட ஆறு அதிகாரிகள் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 03-

கிளந்தான், தும்பட் – டில் கடத்தல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளித்து, துணை நின்றதாக நம்பப்படும் அரசாங்க அமலாக்க ஏஜென்சியின் உதவி இயக்குநர் மற்றும் ஐந்து அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு நபர்களும் விசாரணைக்கு ஏதுவாக அவர்களை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை SPRM இன்று பெற்றுள்ளது.

கடத்தல் நடவடிக்கையை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு சந்தேகப் பேர்வழியும் மாதம் தோறும் 5 ஆயிரம் வெள்ளி முதல் 10 ஆயிரம் வெள்ளி வரையில் கடத்தல்காரர்களிடருந்து லஞ்சமாக பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது

WATCH OUR LATEST NEWS