பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 03-
அரசாங்க இலாகாக்கள் அனைத்திலும் இஸ்லாமிய சமய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் இந்து, கிறிஸ்துவ, பெளத்த, சீக்கிய மற்றும் Taoisme சமயத்தவர்களை பிரதிநிதிக்கும் மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றத்தை பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் முகமது நைம் மொக்தார் வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவிருக்கிறார்.
ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய சமய மேம்பாட்டு இலாகாவின் அதிகாரிகள், அரசாங்க இலாகாக்களில் நியமிக்கப்பட்டு இருப்பதை அந்த சமய மன்றம் கடுமையாக எதிர்த்து வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் அந்த மன்றத்தின் பொறுப்பாளர்களை அமைச்சர் சந்திக்கவிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..