அனைத்து அரசாங்க இலாகாக்களிலும் சமய அதிகாரிகள் நியமனமா? / அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்

புத்ராஜெயா,செப்டம்பர் 03-

இந்து, கிறிஸ்துவ, பெளத்த, சீக்கிய மற்றும் Taoisme சமயத்தவர்களை பிரதிநிதிக்கும் மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சருமான Fahmi தெரிவித்தார்.

எந்தவொரு அரசாங்க இலாகாவிலோ அல்லது அமைச்சிலோ புதியதாக ஜாக்கிம் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. அதேவேளையில் தற்போது அந்த இலாகாக்களில் உள்ள ஜாக்கிம் அதிகாரிகள் முன்பு நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆவார் என்று ஃபஹ்மி விளக்கம் அளித்துள்ளார்.

அரசாங்க இலாகாக்களில் ஜாக்கிம் அதிகாரிகளை நியமிக்கும் கொள்கை என்பது முன்பு 2006 மற்றும் 2007 இல் உள்ள அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இப்போது அந்த நடைமுறை இல்லை என்று அமைச்சர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS