53 வயது தமிழ் நடிகையை ரூமுக்கு அழைத்தார் மோகன் லால்? கொளுத்தி போட்ட பிரபலம்!

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் மோகன் லால், AMMA தலைவர் பதவியில் இருந்து திடீர் என பதவி விலகியது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்துள்ள நிலையில், தற்போது மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், மோகன் லால் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

மலையாள திரையுலகின், சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு, தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் நடித்துள்ள இருவர், சிறைச்சாலை, ஜில்லா, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களாகும். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ‘இருவர்’ திரைப்படத்தில் MGR -ரின் தோற்றத்தில் நடித்திருந்தார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன் லால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்ட பின்னர் ஏன், பதவியை ராஜினாமா செய்தார் என்பது ரசிகர்களுக்கே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை பார்வதி திருவோத்து மோகன் லாலை கோழை என விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சில நடிகைகள் மறைமுகமாக மோகன் லாலும் பாலியல் தொந்தரவு கொடுப்பவர் என்பதை தெரிவித்து வருவது ஒருபுறம் இருக்க, பிரபல மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.. 53 வயது தமிழ் நடிகையை ரூமுக்கு அழைத்ததாக தான் கேள்வி பட்டதாக கூறி பதற வைத்துள்ளார். 

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சபிதா ஜோசப், ‘ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மம்மூட்டி  பேசும் போது நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் முதலில் முன்வந்து இப்படி பேச வேண்டிய AMMA தலைவர் மோகன் லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அமைதியாக உள்ளார்.

மம்மூட்டியை பொறுத்தவரை தன்னுடைய மனைவிக்கு பயப்புடுபவர். ஆனால் மோகன் லால் பெண்கள் விஷயத்தில் நல்லவர் இல்லை என சொல்ல முடியாது. என்னிடம் ஒருவர் பேசி கொண்டிருக்கும் போது மோகன்லால் பற்றி பேசினார். அவர் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் நடிக்கும் போது, அவரை ரூமுக்கு அழைத்ததாகவும், ஆனால் ரம்யா கிஷ்ணன் அதனை மறுத்திவிட்டதாகவும்… பின்னர் சவால் விடுவது போல் உன்னை ரூமுக்கு வர வைக்கிறேனா? இல்லையா என்று பார் என மிரட்டுவது போல் கூறியதாக சவால் விடுவது போல் பேசியதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் கொழுந்து விட்டு எரிகிறது.

WATCH OUR LATEST NEWS