ராட்ஷச முதலையைப் பிடிப்பதற்கு இரண்டு பொறிகள் வைக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், செப்டம்பர் 04-

ஷா ஆலாம், செக்‌ஷன் 7 இல் உள்ள ஒரு ஏரி சூழ்ந்துள்ள பகுதியில் முதலை நடமாட்டத்தினால் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வரும் வேளையில் அந்த முதலையை பிடிப்பதற்கு இரண்டு பெரிய இரும்புக்கூண்டுகள் இறக்கப்பட்டன..

ஷா ஆலாம் மாநகர் மன்றத்தினால் அந்த ஏரியில் பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று காலையில் வந்து சேர்ந்த PERHILITAN எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா இலாகாவைச் சேர்ந்த பணியாளர்கள், அந்த ராட்ஷச முதலை நடமாடிய இடத்தில் இரண்டு இரும்புக்கூண்டுகளை பொறியாக வைத்துள்ளனர். ஒவ்வொரு இரும்புக்கூண்டின் எடையும் 200 கிலோவாகும்.

நெகிரி செம்பிலான் Perhilitan- னிடமிருந்து இரவலாக பெறப்பட்டுள்ள ஒவ்வொரு இரும்புக்கூண்டும், அந்த ராட்ஷச முதலை சிக்குவதற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும் என்று அதன் தலைமை இயக்குநர் wan முகமது அடிப் வான் முகமட் யூசோ தெரிவித்தார்.

PERHILITAN அதிகாரிகள், அந்த முதலையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு அந்த ஏரிப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS