ABS பாதுகாப்பு சாதன அறிமுகத்தால் மோட்டார் சைக்கிள் விலை அதிகரிக்கக்கூடும்

ஷா ஆலம், செப்டம்பர் 04-

150 CC அல்லது அதற்கும் கூடுதலான வேக சக்தியை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், ABS பாதுகாப்பு சாதனம் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால் அவ்வகை புதிய மோட்டார் சைக்கிள்கள் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABS என்று சுருங்க அழைக்கப்படும் Anti- Lock Breaking System என்ற பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக்கொண்ட இந்த முறை, ஆபத்து அவசர வேளைகளில் பிரேக்கை மிக விரைவாக இயக்கி, மோட்டார் சைக்கிள்களின் இரு சக்கரங்கள் சுழலுதல் நிறுத்தப்படாமல் தடுக்கும் பாதுகாப்பு சாதனமாகும்.

மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த ABS அமைப்பு முறையை அரசாங்கம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து புதிய மோட்டார் சைக்கிள்களின் விலை 100 வெள்ளி முதல் 200 வெள்ளி வரை உயரக்கூடும் என்று வாகனம் பூட்டும் Automobile தொழில் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

எனினும் இந்த விலையேற்றத்தினால் பிரபல மோட்டார் சைக்கிள்களின் விற்பனை பாதிக்காது என்று Automobile தொழில்துறையைச் சேர்ந்த வல்லுநர் ஹெசெரி சம்சூரி ஆருடம் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS