பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 04-
இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை இணையத்தளங்களில் ஏமாற்று வேலை, மோசடி தொடர்பான 32 ஆயிரத்து 676 உள்ளடக்கங்களை மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் அகற்றியுள்ளதாக தொடர்புத்துறை துணை அமைச்சசர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 6 ஆயிரத்து 297 அதிகமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை இணைய மோசடிகளால் மலேசியாவிற்கு 318 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணை அமைச்சர் தியோ குறிப்பிட்டார்.
இழப்பீட்டின் மதிப்பு, உண்மையான எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சமூக வலைத்தளத் நடத்துநர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட போதிலும் இணைய மோசடிக் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், இழப்புகளும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவதாக தியோ குறிப்பிட்டார்.