ஷா ஆலம், செப்டம்பர் 04-
தாம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில் கெடா மந்திரி பெசார் டத்தோ செரி முஹம்மது சனுசி நோர்பதில் அளிக்க மறுத்து விட்டார்.
அதேவேளையில் இவ்விவகாரம் குறித்து பேச தாம் விரும்பவில்லை என்று ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான கெடா மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.
மந்திரி பெசார் சனூசி, ஓர் உயர் பெண் போலீஸ் அதிகாரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கெடா மாநிலத்தில் அரிய மண் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் புகார் தொடர்பில் விசாரணை செய்ய வந்த அந்த உயர் பெண் போலீஸ் அதிகாரியை சனூசி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாங்கியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சியின் நான்கு மாநிலங்களுக்கான SG4 மாநாட்டில் சனூசி குறித்து சில வதந்திகள் பரவியுள்ளன.
அது குறித்து சனூசியை கேட்ட போது, தம்மை பிடிப்பதற்காக வந்தவரை, இறைவன் அருளில் தாம் பிடித்து விட்டதாக மிக சூசமாக கோடி காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.