புத்ராஜெயா,செப்டம்பர் 04-
அரசாங்க மருத்தவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட சொக்சோ இழப்பீடு மோசடிகள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு சுகாதார அமைச்சு, முழு ஒத்துழைப்பு நல்கும் என்று இன்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி வேலைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் அரசு மருத்துமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சுகாதார அமைச்சு தற்காக்காது.
மருத்துவர்கள் என்ற உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடியவர்களால் புரியப்பட்டுள்ள இத்தகைய அதிகார துஷ்பிரயோக மோசடி வேலைகளை சுகாதார அமைச்சு சகித்துக்கொள்ளாது இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.