பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் Vladivostok- கை சென்றடைந்தார்

விளாடிவோஸ்டாக் ,செப்டம்பர் 04-

ரஷியாவின் தூர கிழக்கு மாநிலத்தின் முதன்மை துறைமுக மாநகரான Vladivostok- கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் தலைமையிலான மலேசிய பேராளர்கள் குழுவினர், சிறப்பு விமானம் மூலம் மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 6.33 மணிக்கு Vladivostok- அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

பிரதமருடன், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், முதலீடு, வர்ததகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் டத்தோ அற்றூர் ஜோசப் குருப் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.

செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி 6 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஒன்பதாவது கிழக்கு பொருளாதார ஆய்வரங்கிலும் டத்தோஸ்ரீ அன்வார் உரை நிகழ்த்தவிருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS