அந்த வாகனமோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்

ஜொகூர் , செப்டம்பர் 04-

ஜோகூர்பாரு, ஜாலான் பெர்சியரன் இம்பியன் எமாஸ் என்ற இடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வாகனத்தை மிக அபாயகரமாக எதிர் திசையில் செலுத்தி வந்த காரோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

பிற்பகல் 1.58 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, X சமூக ஊடகத்தில் ஆடவர் ஒருவரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிவப்பு நிற வாகனத்தை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட புலன்விசாரணையில் அந்த வாகனம் Proton X70 ரகத்தை சேர்ந்தது என்றும், அது உள்ளூரைச் சேர்ந்த 47 வயதுடைய நபருக்கு சொந்தமானது என்றும், கண்டறியப்பட்டுள்ளதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS