புத்ராஜெயா,செப்டம்பர் 04-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைவதற்கு, அவர்களை கொண்டு வரும் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தேடி வருகிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றி வந்த அந்த குடிநுழைவு அதிகாரி, தான் தேடப்படுவதாக தகவல் அறிந்து தலைமறைவாகி விட்டதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
எனினும் அந்த அதிகாரி, வெளிநாட்டிற்கு தப்பிவிடவில்லை. உள்ளூரில் இன்னமும் தலைமறைவாக இருந்து வருகிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் வேளையில் SPRM விசாரணைக்கு 46 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.