கோலாலம்பூர், செப்டம்பர் 04-
கோலாலம்பூர் மாநகரின் முக்கிய நில அடையாளப்பகுதியான ஜாலான் சுல்தான் இஸ்மாயில்-லில் உள்ள கான்கார்ட் ஹோட்டலும், அருகில் உள்ள கட்டப்பகுதியும் 70 கோடி வெள்ளிக்கு விற்கப்படவிருக்கிறது.
581 அறைகளைக்கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டலான கான்கார்ட் ஹோட்டலும், அதன் அருகில் உள்ள கட்டமும் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
கோலாலம்பூரின் மையப்பகுதியில் விற்றிருக்கும் கான்கார்ட் ஹோட்டல் உடைக்கப்பட்ட, புதிய மேம்பாடுகள் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தளமாக கொண்ட மலேசிய வர்த்தகர் ஓங் பெங் செங், அந்த நிலப்பகுதியை கொள்முதல் செய்யவிருக்கிறார்.
நாடு சுதந்திரம் பெற்ற போது ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் 1957 லிருந்து 1990 ஆம் ஆண்டு வரையில் Hotle Merlin என்ற பெயரில் விளங்கிய Concorde ஹோட்டல் , உலகத் தலைவர்கள், முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தங்கி சென்ற பிரபல தங்கும் விடுதியாகும்.
அமெரிக்கா, Las Vegas- ஸிற்கு வெளியே தென்கிழக்காசியாவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர், மெர்டேக்கா அரங்கில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற கனரக குத்துச்சண்டைப் போட்டியின் போது, அன்றைய மெர்லின் ஹோட்டலாக விளங்கிய கான்கார்ட் ஹோட்டல், மக்களின் மிகுந்த கவன ஈர்ப்புப்பகுதியாக மாறியது.
கனரக குத்துச்சண்டை கோதாவில் குதித்த அன்றைய சாம்பியன் முகமது அலி -க்கும் ஜோ பக்னர்- க்கும் இடையிலான குத்துச் சண்டைப் போட்டியை முன்னிட்டு முகமட் அலி, கோலாலம்பூர் Hilton ஹோட்டலிலும், ஜோ பக்னர்- மெர்லின் என்று அழைக்கப்பட்ட கான்கார்ட் ஹோட்டலிலும் தங்கினர் என்பது வரலாறாகும்.