ரஷிய அதிபரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

விளாடிவோஸ்டாக் , செப்டம்பர் 04-

ரஷியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷியாவின் முதன்மை துறைமுக நகரான விளாடிவோஸ்டாக் – கில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் – னை இன்று சந்தித்தார்.

நாளை வியாழக்கிழமை ஒன்பதாவது கிழக்கு பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றவிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார், ரஷியாவிற்கான இரண்டு நாள் அலுவல் பயணத்தையொட்டி விளாடிமிர் புடின் – னுடன் இரு வழி பேச்சுவார்த்தை நடத்தினார்..

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார், ரஷியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரத்துவ வருகையாக இது விளங்குகிறது.

WATCH OUR LATEST NEWS