மேலும் ஒரு மருத்துவர் தேடப்பட்டு வருகிறார்

புத்ராஜெயா,செப்டம்பர் 04-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் இழப்பீட்டுத் தொகையை கோருவதற்கு அதன் சந்தாதாரர்களுக்கு போலி சான்றிதழை தாயரித்துக் கொடுத்து, மோசடி வேலைக்கு துணை நின்றதாக நம்பப்படும் பினாங்கு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 3 மூத்த மருத்துவர்கள் மற்றும் இதர 30 பேர் பிடிபட்டுள்ள வேளையில் மேலும் ஒரு மருத்துவர் தேடப்பட்டு வருகிறார்.

பினங்கில் நிகழ்ந்த மிகப்பெரிய சொக்சோ இழப்பீட்டு மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மேலும் ஒரு மருத்துவர் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மினால் தேடப்பட்டு வருவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மருத்துவர், பினாங்கில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் ஆவார் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

தற்போது பிடிபட்டுள்ள 26 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மருத்துவர்கள் உட்பட 33 பேர், இன்று காலையில் பினாங்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS