அச்சுறுத்திய அந்த முதலை பிடிபட்டது

ஷா ஆலம், செப்டம்பர் 05-

ஷா ஆலாம், செக்‌ஷன் 7 இல் உள்ள ஓர் ஏரிப்பூங்காவில் நடமாடிய முதலை ஒன்றை , சிலாங்கூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்கா இலாகாவினர் களம் இறங்கிய 24 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக வளைத்துப்பிடித்தனர்.

கடந்த மூன்று தினங்களாக ஷா ஆலாம், செக்‌ஷன் 7 இல் உள்ள மக்களுக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்ததாக கூறப்படும் முதலையின் நடமாட்டத்தினால் அந்த ஏரிப்பூங்கா பொதுமக்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் அந்த முதலையை பிடிப்பதற்கு நேற்று காலையில் PERHILITAN எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா இலாகாவினர், அந்த ஏரிப்பூங்காவை சூழ்ந்து கொண்டனர் என்பதுடன் முதலையை பிடிப்பதற்கு இரண்டு இரும்புக்கூண்டுகள் பொறியாக வைக்கப்பட்டன.

அந்த முதலை நேற்று இரவு 10.20 மணியளவில் இரும்புக்குகூண்டு பொறியில் சிக்கியதாக சிலாங்கூர் மாநில PERHILITAN தலைவர் வான் முகமது அடிப் வான் முகமட் யூசோ தெரிவித்தார்.

கரிப்புத் தன்மையிலான நீரில் வாசிக்கக்கூடிய அந்த முதலமையின் நீளம் 1.68 மீட்டராகும். எடை 15 முதல் 20 கிலோ என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS