புத்ராஜெயா,செப்டம்பர் 05-
கடந்த பிப்ரவரி மாதம் பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு சீன வெளியுறவு அமைச்சு அனுப்பிய தூதரக குறிப்பு ஆணை கசிந்தது தொடர்பில் வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா, தனது உள்விசாரணையை தொடங்கியுள்ள வேளையில் இது குறித்து போலீசிலும் புகார் செய்யவிருக்கிறது.
அரச தந்திர அளவிலான அந்த தூதரக குறிப்பு ஆணையின் உள்ளடக்கம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் ஊடக அகப்பக்க்ததில் ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான அதிகாரத்துவ தொடர்புக்குரிய ஒரு வழிமுறையின் கிழ் அனுப்பி வைக்கப்பட்ட முக்கியமான ஆவணத்தின் உள்ளடக்கம் கசிந்து இருப்பதை விஸ்மா புத்ரா கடுமையாக கருதுவதாக தெரிவித்துள்ளது.