கோத்தா பாரு,செப்டம்பர் 05-
பட்டர்வொர்த் , ஜாலம் Assumption- னில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.20 மணியளவில் நிகழ்ந்தது.
லிவ் ஹூங் க்வீ என்று அடையாளம் கூறப்பட்ட 55 வயதுடைய நபர், தனது படுக்கையறை கட்டிலில் கடும் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.