ஜொகூர் , செப்டம்பர் 05-
கோலாலம்பூரில் முன்னணி ஹோட்டல் ஒன்றில் e-hailing ஓட்டுநரான மாற்றுத் திறனாளி ஒருவரை தாக்கிய அரச பேராளரின் உடன் செல்லும் போலீஸ் மெய்காவலர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டு ஏமாற்றம் தெரிவித்துள்ள அந்த மாற்றுத் திறனாளி, நாளை வியாழக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் மகஜர் ஒன்றை சமப்பிக்கவிக்கிறார்.
சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று கூறப்படும் நிலையில் தம்முடைய விவகாரத்தில் அந்த மெய்காவலர் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாராமுகமாக இருந்து வருவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஓங் இங் கியோங், தமக்கு நீதிக் கிடைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் மகஜர் சமர்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அந்த மாற்றுத் திறனாளியும், அவருக்கு நியாயம் கிடைக்க போராடி வரும் Lawyers for Liberty அமைப்பினரரும் இந்த மகஜரை சமர்ப்பிக்கப் போவதாக இன்று தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்- மிற்கு உடன் செல்லும் போலீஸ் மெய்காவலர் ஒருவர் கடந்த மே 28 ஆம் தேதி தம்மை தாக்கியதாக 48 வயதுடைய அந்த மாற்றுத்திறனாளி போலீஸ் புகார் செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்பு, கடந்த ஜுன் 5 ஆம் தேதி போலீஸ் படைத் தலைவர் tan Sri Razarudin Husain அறிவித்து இருந்தார்.
சம்பந்தப்பட்ட மெய்காவலர் தாக்குதல் நடத்தும் காட்சி தொடர்பான காணொளி ஒன்று முக்கிய ஆதராமாக சமர்ப்பிக்கப்பட்டும், அந்த மெய்காவலர் மீது எந்தவொரு குற்றவியல் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மாற்றுத் திறனாளி வாதிட்டுள்ளார்.
நாளை காலை 11 மணியளவில் புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் மகஜரில் அந்த மாற்றுத் திறனாளி வாகனத்தில் பதிவு செய்யப்பட்ட DASHCAM காணொளி பதிவும் ஆதரமாக சமர்ப்பிக்கப்படும் என்று Lawyers for Liberty அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.