அலோர் கஜா,செப்டம்பர் 05-
கடந்த 7 ஆண்டுகளாக தனது இரண்டு மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான ஆடவர் ஒருவர், மலாக்கா,அலோர் கஜா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
39 வயதுடைய அந்த நபர், நீதிபதி சியாசானா அப்துல் லாஜிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் ஒன்பது குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன..
தனது 13 மற்றும் 16 வயதுடைய இரண்டு மகள்களை தன்னுடைய பாலியல் இச்சைக்கு அந்த நபர் பயன்படுத்தி வந்ததுடன் இயற்கைக்கு மாறாக, பாலியல் வன்கொடுமைகளை புரிந்து வந்ததாகவும் அந்த ஒன்பது குற்றச்செயல்களில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.