சிலிம் ரீவர் பெய்லி பாலம் விரைவில் பொருத்தப்படும்

பேராக்,செப்டம்பர் 05-

பேரா, ஜாலான் ஸ்லிம் ரிவர் மற்றும் பெஹ்ராங் ஹுலு – வை இணைக்கும் வரலாற்றுப்பூர்வமான சுங்கை ஸ்லிம் ஆற்றுப்பாலம், நீர் பெருக்கத்தினால் ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பாலத்திற்கு பதிலாக இரும்பு கட்டமைப்பைக் கொண்ட Bailey பாலத்தை பொருத்தும் பணி வரும் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஸ்லிம் கிராமம் – ஜில் ஏற்பட்ட நீர் பெருக்கின் காரணமாக, இரண்டாவது உலகப் போரின் போது இராணுவத் தளவாடங்களை கொண்டு செல்வதற்கு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட அந்தப்பாலம், ஆற்றில் அடித்து வரப்பட்ட மரங்களினால், சில நிமிடங்களில் தகர்க்கப்பட்டு, நீரோடு, நீரோடாக அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், ஸ்லிம் கிராமம் – ஜில் அந்த ஆற்றுப்பகுதியில் இரு மருங்கிலும் வசிக்கும் மக்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இரு பகுதி மக்களின் போக்குவரத்துக்கு ஏதுவாக ஒரு தற்காலிக நடவடிக்கையாக அந்த பெய்லிப் பாலம் தற்போது பொருத்தப்பட்டு வருவதாக முவாலிம் மாவட்ட பொதுப்பணி இலாயாவின் பொறியியலாளர் யூசைம் அகமது யூசுப் தெரிவித்துள்ளார். அந்தப் பாலம் விற்றிருந்த பகுதியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட திடக் கழிவுப்பொருட்கள் அனைத்தும், 90 விழுக்காடு அகற்றப்பட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS