வாகனம் நிறுத்தும் இடத்தில் குறுக்கீடு: ஆடவர் கத்தியினால் தாக்கப்பட்டார்

தவாவ் , செப்டம்பர் 05-

வீடமைப்புப்பகுதி ஒன்றில் வாகன நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட வாகன குறுக்கீடு தொடர்பில் இரு ஆடவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் நீண்ட கத்தினால் தாக்கப்பட்டார். இதில் கடும் காயங்களக்கு ஆளான 24 வயது நபர், மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோலாலம்பூர், பெகன் கெபோங்- கில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட ஆடவரை 32 செண்டிமீட்டர் நீளத்தைக்கொண்ட கத்தியினால் 28 வயது நபர் தாக்கியுள்ளார். கடும் காயங்களுக்கு ஆளான நபர், 35 தையல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அன்யை தினமே மாலை 6.45 மணியளவில் சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக அகமது சுகர்னோ குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளா நபர், சுருண்டு கீழே விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் பொது மக்கள் அலறும் காட்சியைக்கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS