கோலாலம்பூர், செப்டம்பர் 05-
தங்களின் இரண்டு வயது குழந்தையின் உடலில் போதைப்பொருள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதாக கணவனும், மனைவியும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தனிநபருக்கு பாதுகாவலராக பணியாற்றி வரும் 31 வயது கணவரும், குடும்ப மாதுவான 30 வயது பெண்ணும் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ, கம்போங் பாசிர் பாரு, ஜாலான் கிளாங் லாமா -வில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கணவனும் மனைவியும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.