தீ விபத்தில் பள்ளியின் கணினி அறை அழிந்தது

சுங்கை சிப்புட் ,செப்டம்பர் 05-

இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுங்கை சிப்புட், பாவாங் தேசிய இடைநிலைப்பள்ளியின் கணினிக்கூடம் கடுமையாக சேதமுற்றது.

பள்ளியின் நான்காவது மாடியில் உள்ள கணிணிக் கூடத்தில் தீப்பிடித்துக்கொண்டது தொடர்பில் அதிகாலை 12.09 மணியளவில் சுங்கை சிப்புட் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பை பெற்றதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

தீயணைப்புப்படையினர் முழு வீச்சில் தீயை அணைத்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும் அந்த கணினிக் கூடம் 50 விழுக்காடு கடுமையாக சேதமுற்றதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS