ஈப்போ , செப்டம்பர் 05-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் படிவ மாணவனை கொன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை ஜாமீனில் விடுவிப்பதற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
முஹம்மது நஸ்ரி அப்துல் ரசாக் என்ற அந்த உயர் போலீஸ் அதிகாரி குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அவரை ஜாமீனில் விடுவிப்பதில், நியாயப்படுத்தக்கூடிய எந்தவொரு சிறப்புத்தன்மையையும் இல்லை என்று கூறி, அந்த போலீஸ்காரின் விண்ணப்பத்தை உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் நிராகரித்தார். .
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி 12.40 மணியளவில் ஈப்போ, எஸ்எம்கே ஜாதி இடைநிலைப்பள்ளி மாணவனை காரில் மோதி தள்ளியதுடன், SPM தேர்வு எழுதும் அந்த மாணவனுக்கு மரணம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டதாக கெடா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அந்த உயர் போலீஸ் அதிகாரி கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.