கோலாலம்பூர், செப்டம்பர் 05-
கோலாலம்பூர், செந்தூல் மற்றும் கேளிக்கை மையங்களுக்கு போதைப்பொருளை விநியோகித்து வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாலம்பூர், செந்தூல் Eco Sky ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டுள்ளனர் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு போதைப்பொருள் விநியோகிப்பாளர்கள் பிடிபட்டதுடன் இரண்டு இடங்களில் 48 ஆயிரத்து 757 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.