கோலாலம்பூர், செப்டம்பர் 05-
அந்நியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அமலாக்க ஏஜென்சியை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான SPRM கைது செய்துள்ளது.
சரவாக், ஸ்ரீ அமானில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு சோதனை என்ற பெயரில் எந்தவொரு இடையூறும் விளைவிக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அந்த இரண்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.