பெனாம்பாங்,செப்டம்பர் 05-
சபா, பெனாம்பாங் – கில் இரண்டு கும்பல்களைச் சேர்ந்த பாகிஸ்தான் தொழிலாளர்கள் முன்விரோதம் காரணமாக சண்டையில் ஈடுபட்ட காட்சி, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.
இரண்டு கும்பல்களும் மோதிக்கொள்வது தொடர்பான காட்சிகள், இரண்டு காணொளிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஒன்று 45 விநாடியும், மற்றொன்று 18 விநாடியும் ஓடக்கூடியதாகும்.
பெனாம்பாங் வட்டாரதில் கடை வளாாகப்பகுதியில் பாகிஸ்தான் பிரஜைககள் தங்களுக்குள் அடித்துக்கொண்டதை மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சாமி நியூட்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.06 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த சண்டை தொடர்பாக போலீஸ் புகாரும் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.