மலேசியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே விமானச்சேவை

விளாடிவோஸ்டாக் , செப்டம்பர் 05-

மலேசியாவிற்கும், ரஷியாவிற்கும் இடையே நேரடி விமானச்சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தை இரு நாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார்.

மலேசியா எப்போதுமே ஒரு நட்புறவான நாடாகும். . எந்தவொரு வல்லரசு நாடும் ஆதிக்கம் செலுத்தவில்லை. பொருளாதார ரீதியிலும் கலாச்சார அளவிலும் உணவு வகையிலும் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. எனவே ரஷிய சுற்றுப்பயணிகள், மலேசியாவிற்கு அதிகளவில் வருகை புரிய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ரஷியாவிற்கு இரண்டு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார், துறைமுக நகரான VLADIVOSTOK- நடைபெற்று வரும் ஒன்பதாவது கிழக்கு பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS