கோலாலம்பூர், செப்டம்பர் 05-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் திடீர் குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜை விழுந்த பகுதியில் வீடியோ படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர்டத்தோ ருஸ்டி முஹமட் இசா அறிவுறுத்தினார்.
நில அமிழ்வுப்பகுதியில் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவது மிக ஆபத்தானதாகும். அங்கு நடைபெற்று வரும் சீரமைப்புப்பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று பொது மக்களை டத்தோ ருஸ்டி கேட்டுக்கொண்டுள்ளார்.