குவாந்தன்,செப்டம்பர் 05-
கும்பல் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து, பகாங் அரச பேராளர் ஒருவர், தனிநபரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு மஹ்கோடா, தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா சுல்தான் அப்துல்லா இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று கதை தெங்கு மஹ்கோடா பகாங் என்ற Instagram பதிவேற்றத்தில் தெங்கு மஹ்கோடா, தெங்கு ஹசனல் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரின் சமரசத்திற்கும் இணங்காமல் இவ்விவகாரம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உடனடியாகவும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அரச பேராளர் உட்பட யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். .
இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால், சட்டத்தை மீறிய செயலாக இருக்குமானால் எந்தவொரு தரப்பினரையும் தாம் தற்காக்கப் போவதில்லை என்று தெங்கு மஹ்கோடா, தெங்கு ஹசனல் உறுதியாக தெரிவித்துள்ளார்.