டிரெய்லர் லோரி மோதி யானை இறந்தது

குளுவாங், செப்டம்பர் 06-

ஜோகூர், குளுவாங், கம்போங் கஜா, ஜாலான் ஸ்ரீ திமூர்-ரில் டிரெய்லர் லோரியினால் மோதப்பட்ட யானை ஒன்று பரிதாபமாக மாண்டது.

நேற்று இரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

அதிவேக சக்தியைக் கொண்ட Volvo ரக டிரெய்லர் லோரி ஒன்று,கஹாங் திமூர்- ஐ நோக்கி சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முற்பட்ட யானையை மோதி தள்ளியதாக அவர் குறிப்பிட்டார்.

தலையில் கடுமையான காயங்களுக்கு இலக்கான அந்த ஆண் யானை, சம்பவ இடத்திலேயே மாண்டது. இச்சம்பவத்தில் 53 வயதுடைய டிரெய்லர் லோரி ஓட்டுநர் காயமடையவில்லை என்று ஏஎஸ்பி பஹ்ரின் முகமது நோ குறிப்பிட்டார்.

யானையின் உடல் வனவிலங்கு, தேசியப் பூங்காவான PERHILITAN உதவியுடன் சாலையிலிருந்து அகற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS