குவாந்தன்,செப்டம்பர் 06-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போன்று பள்ளி பேருந்தில் பள்ளி மாணவியான ஒரு சிறுமியை வீடியோ படம் எடுத்த அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் தெரிவித்துள்ளார்.
24 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர் இன்று காலையில் குளுவாங், சிம்பாங் ரெங்கம்- மில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குளுவார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப்பிரிவு அந்த பேருந்து ஓட்டுநரை கைது செய்ததுடன் அந்த மாணவியை வீடியோ படம் எடுப்பதற்கு அவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கைப்பேசியும் பறிமுதல் செய்துள்ளனர் என்று கமிஷனர் குமார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.