பினாங்கு அரசு மருத்துவமனைகளின் சேவை பாதிக்காது

ஜார்ஜ் டவுன்,செப்டம்பர் 06-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவிடமிருந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி, இழப்பீட்டு கோரிக்கை பெறுவதில் சந்தாதாரர்களின் மோசடி வேலைகளுக்கு துணை நின்றதாக நம்பப்படும், பினாங்கில் இரண்டு மருத்துவமனைகளைச் சேர்ந்த சில மூத்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைகளில் செயலாக்கம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபரங் ஜெயா அரசு மருத்துவமனை மற்றும் புக்கிட் மெர்தாஜம் அரசு மருத்துவமனை ஆகியவை வழக்கமான செயல்பாடுகளை கொண்டுள்ளன. சில மருத்துவர்கள் இல்லாததால் அவற்றின் சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று பினாங்கு மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஃபாசிலா ஷேக் அல்லாவுடின் தெரிவித்தார்.

சொக்சோ இழப்பீடு கோரிக்கையில் சந்தாதாரர்களுக்கு போலி சான்றிதழை வழங்கியது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இதுவரையில் ஐந்து மருத்துவர்களை செய்துள்ளனர்.

ஏஜெண்டுகள் என்று நப்பப்படும் 34 பேரை SPRM வளைத்துப்பிடித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS