ரஷியா , செப்டம்பர் 06-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், / ரஷியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் அலுவல் பயணம், மலேசியாவிற்கும், ரஷியாவிற்கும் இடையிலான உறவில் புதிய உத்வேகத்தை தந்துள்ளது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ அன்வாரின் வருகையானது, எவ்வித ஐயப்பாட்டிற்கு இடமளிக்காமல் ரஷியாவால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.
இது, மலேசியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான இரு வழி உறவில் புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது.
ரஷியா வருகையின் இரண்டாவது நாள், துறைமுக நகர் VLADIVOSTOK- நடைபெற்ற ஒன்பதாவது கிழக்கு பொருளாதார ஆய்வரங்கில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தினார்
ஆய்வரங்கின் நோக்கம், ஏனைய நாடுகளின் பங்களிப்பு தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வாரின் உரை, பேராளர்களின் பலத்த கைத்தட்டலால் அரங்கையே அதிரவைத்து இருப்பது, பிரதமரின் ஆளுமைக்கு மற்றொரு சான்றாகும்..
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் – னுடன் நடத்தப்பட்ட சந்திப்பு, இரு வழி உறவு மற்றும் G2G எனப்படும் அரசாங்கத்துடன் அரசாங்க ஒத்துழைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி விண்வெளித்துறை, உயர்மட்டம் அளவிலான தொழில்நுட்பம், ஆள்பலம் பரிமாற்றம், நவீன விவசாயம் ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.