அனைத்து எம்.பி.க்களும் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்

ஷா ஆலம், செப்டம்பர் 06-

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று லஞ்சத்திற்கு எதிராக போராடும் அமைப்பான C 4 ( C பார் ) கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி நிர்வாகம் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்வதற்கும், இது எதிர்க்கட்சியினருக்கு மட்டுமே பொருந்தும் என்ற நிலையில்லாமல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

அரசியல்வாதிகள் தங்களின் பதவியைப் பயன்படுத்தி தங்களின் தனிப்பட்ட நலனுக்கும், தாங்கள் சார்ந்துள்ள கட்சி நலனுக்கும் செல்ல வளங்களை குவித்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் சொத்து விபரங்களை அறிவிப்பது மிக முக்கியமாகும் என்று C4 அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS