கோலாலம்பூர், செப்டம்பர் 06-
STPM தேர்வை வெற்றிகரமாக முடிந்த மாணவர்களில் 71 ஆயிரத்து 290 பேருக்கு பொது பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
STPM தேர்வு முடிவு வெளியானப் பின்னர் பொது பல்கலைக்கழகங்களில் தங்களின் பட்டப்படிப்பை மேற்கொள்தற்கு தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து UPUOnline மூலமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆயிரத்து 114 துறைகளில் இளம் கலைப்பட்டப்படிப்பிற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.