ஜொகூர் , செப்டம்பர் 08-
பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற சிறார்களை பயன்படுத்தி அவர்களை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக நம்பப்படும் 6 சீன நாட்டுப் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஜோகூர் பாரு மாநகரில் மெற்கொள்ளப்பட்ட சொதனையில் அந்த 6 சீன நாட்டுப்பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை ஜோகூர் மாநில இயக்குநர் டத்தோ முகமட் ருஷ்டி முகமட் தரஸ் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒபிஸ் செர்காப் சொதனையில் அவர்கள் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.