கெரிக், செப்டம்பர் 09-
Gerik, Tanjung Rimbun, Kampung Batu 6, பெண்டாரியாங் என்ற இடத்தில் கிராம மக்களுக்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்தி வந்த 14 யானைகள் பிடிபட்டன. கடந்த வாரம் வியாழக்கிழமை நான்கு யானைகள் பிடிக்கப்பட்ட வேளையில் பின்னர் எஞ்சிய 10 யானைகள் பிடிபட்டதாக வனவிலங்கு தேசியப் பூங்கா பாதுகாப்பு இலாகாவான PERHILITAN தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் தொல்லைகளை எதிர்நோக்கிய அக்கிராமத்து மக்கள், இது குறித்து PERHILITAN- னிடம் புகார் செய்தனர்.
கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரை 6 யானைகள் பிடிபட்டன. தற்போது மேலும் 14 யானைகள் பிடிக்கப்பட்டதாக PERHILITAN பேரா மாநிலத் தலைவர் யோசுப் ஷெரீப் தெரிவித்தார்.