வளையத்தை மீட்க தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டது

கோலாலம்பூர், செப்டம்பர் 09-

ஆடவர் ஒருவரின் ஆண் உறுப்பில் சிக்கிக்கொண்ட உலோக வளையத்தை அகற்றுவதற்கு ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை, தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடியது.

37 வயதுடைய ஆடவர் தனது ஆண் உறுப்பில் மாட்டிக்கொண்டதாக கூறப்படும் மோதிரம் போன்ற வளையத்தை, அகற்ற முடியாமல் பெரும் வீக்கம் கண்ட நிலையில் கடைசியில் அந்த வளையத்தை அகற்றுவதற்கு ஈப்போ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அந்த வளையத்தை வெட்டி எடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய மருத்துவர் குழு, பின்னர் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடியது.

மனையிலிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்து 10 மணியளவில் மருத்துவமனையை சென்றடைந்த வீரர்கள் பிரத்தியேக சாதனத்தை பயன்படுத்தி அந்த வளையத்தை அகற்றினர்.

எனினும் வளையத்தை அகற்றும் பணியின் போது ஆண் உறுப்பில் ஏற்பட் காயத்திற்காக அந்த ஆடவர் தொடர்ந்து ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

WATCH OUR LATEST NEWS