நீர் விநியோகத் திட்ட கட்டுமான பகுதியில் கரை உடைந்த சம்பவம்- ஆயர் சிலாங்கூர் விசாரணை

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 09-

புச்சோங், சுங்கை ராசாவ் நீர் விநியோகத் திட்ட கட்டுமான பகுதியில் கரை உடைந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய Pengurusan Air Selangor நிறுவனம் விரிவான விசாரணை நடத்தவிருக்கிறது.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தினால் நியமிக்கப்படும் புவிசார் தொழில்நுட்பத் துறையில் திறன் பெற்ற நிபுணர்களைக் கொண்டு இந்த விசாரணை நடத்தப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை விளக்கும் விரிவான அறிக்கை மூன்று மாத காலத்தில் வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.

விசாரணைக்கு வழி விடும் வகையிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதை தவிர்க்கும் நோக்கிலும் அப்பகுதியில கட்டுமானப் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS