புத்ராஜெயா,செப்டம்பர் 09-
2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டில் இணைந்துள்ள மாணவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 63 மாணவர்களுக்கு அறவே 3M திறன் இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வாசித்தல், எழுத்து மற்றும் கணக்கிடுவது ஆகிய மூன்று பரிமாணங்களை கொண்ட 3R ஆற்றலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பலவீனமாக காணப்டுகின்றனர் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள 4 லட்சத்து 48 ஆயிரத்து 113 மாணவர்களில் 27.5 விழுக்காட்டு மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள சிறப்பு கல்வித்திட்டத்தின் வாயிலாக போதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.