திரேசா கொக்கின் அறிக்கையை தற்காக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 09-

ஹலால் சான்றிதழ் விவகார சர்ச்சையில் சிக்கி பலரின் கடுமையான குறைகூறல்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி வரும் டிஏபி- யை சேர்ந்த திசோ கொக்கை, முன்னாள் சட்டத்துறை தலைவர் ஜெய்த் இப்ராஹிம் தற்காத்து பேசியுள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்களின் நலன் சார்ந்த ஒரு விவகாரத்தில் துணிந்து குரல் எழுப்பிய, கவலை தெரிவித்துள்ள திரேசா கொக் விவகாரத்தை தெளிவான சிந்தனையை பயன்படுத்தி விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.

திரேசா கொக் விவாதித்த ஹலால் விவகாரம் கடுமையானதாகும். அவர் ஒரு குழப்பவாதி என்று நாம் ஓரம் கட்டி விட முடியாது என்று முன்னாள் கோத்தாபாரு நாடாமன்ற உறுப்பினரான ஜாயிட் தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தில் திரேசா கொக்கிற்கு ஆதரவாக அழுத்தமான கருத்தை பதிவு செய்ய வேண்டிய டிஏபி-யின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், வெறுமனே மந்தமான ஆதரவை தெரிவித்து இருப்பது குறித்து அவரை ஜாயிட் சாடினார்.

WATCH OUR LATEST NEWS