Halal சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்புவதா? தெரசா கோக் – கிடம் புக்கிட் அமான், நாளை விசாரணை

கோலாலம்பூர், செப்டம்பர் 09-

Halal சான்றிதல் குறித்து கருத்துத் தெரிவித்தது தொடர்பில் செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் – கிடம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நாளை செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தவிருக்கிறது.

இது தொடர்பான அழைப்பாணையை டிஏபி -யின் உதவித் தலைவர் தெரசா கோக் – கிற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அனுப்பியுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு புக்கிட் அமானின் D5 குற்றத்தடுப்பு பிரிவினர் அந்த எம்.பி.யை விசாரணை செய்யவிருக்கின்றனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பில் மேலும் சில சாட்கிகள் புக்கிட் அமானுக்கு அழைக்கப்படுவர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுபான விற்பனை இல்லாத உணவகங்களும் ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்று ஜாகிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா முன்வைத்துள்ள பரிந்துரைக்கு தெரசா கோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவது சிறு வியாபாரிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று திரேசா கொக் அச்சம் தெரிவித்து இருந்தார். இந்த பரிந்துரையை அரசாங்கம் மறுபசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS