அந்த ஆடவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோலாலம்பூர், செப்டம்பர் 09-

கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்ட கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள ஒரு பிபிஆர் வீடமைப்புப்பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் ஆடவரை கத்தியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் காய்கறி விநியோகிப்பாளர் ஒருவர், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

28 வயதுடைய Wan Ken Fei என்ற அந்த நபர், நீதிபதி டாக்டர் அஸ்ரோல் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கார் நிறுத்தும் இடத்தில் குறுக்கீடு செய்ததாக கூறப்படும் காய்கறி விநியோகிப்பாளரின் அராஜகப் போக்கை தட்டிக்கேட்க முற்பட்ட 24 வயது முஹம்மது ஐடியல் சுல்ஹில்மி என்பவரை நீண்ட கத்தினால் வெட்டி, காயப்படுத்தியதாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 5.30 மணியளில் செந்தூல் மாவட்டத்திற்கு உட்பட்ட பெகன் கெபோங் – கில் அந்த காய்கறி விநியோகிப்பாளர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் அந்த காய்கறி வியாபாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS