பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 09-
ஈப்போவில் கடந்த மாதம் ஒரு வீட்டில் சிமெண்ட் தரையிலிருந்து குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது தொடர்பில் போலீசார் அனைத்துலக போலீசாரான INTERPOL உதவியை நாடவிருக்கிறது.
அந்த குழந்தையின் சடலத்தை புதைத்ததாக நம்பப்படும் ஓர் இந்தோனேசிய மாதுவை தேடி கண்டு பிடிப்பதற்கு அனைத்துலக போலீசாரின் உதவி நாடப்படும் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
அந்த வீட்டில் ஆகக்கடைசியாக வாடகைக்கு இருந்தவர் அந்த இந்தோனேசிய மாது என்று அடையாளம் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சீரமைம்புப்பணிகளை மேற்கொள்வதற்கு அந்த வீட்டில் முன்புறம் கார் நிறுத்தும் இடத்தில் சிமெண்ட் தரையை உடைத்த குத்தகைத் தொழிலாளர் ஒருவர் அந்த குழந்தையின் சடலத்தை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.