கோலாலம்பூர், செப்டம்பர் 09-
ஷா ஆலம், செக்சியன் யு15 இல் உள்ள கட்டுமானத் தளத்தில் கால்வாயைத் தோண்டும் பணியில் ஈடுபட்ட இரண்டு வங்காளதேசத் தொழிலாளர்கள் மண் சரிந்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை கால 10.20 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புக்கிட் ஜெலுடாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், கால்வாயில் மண்ணோடு மண்ணாக புதையுண்ட 30 மற்றும் 25 வயதுடைய அந்த வங்காளத் தேசத் தொழிலாளர்களின் உடல்களை மீட்டர்.
சதுர வடிவமைப்பைக்கொண்ட Culvert U Box காண்கிரேட் கால்வாய் கட்டமைப்பை இறக்குவதற்கு தோண்டப்பட்ட ஆழான குழியில் அவ்விரு தொழிலாளர்களும் மண் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.