SPRM நடவடிக்கைக்கு மருத்துவச் சங்கம் முழு ஆதரவு

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 09-

பினாங்கு மருத்துவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சொக்சோ போலி இழப்பீடு கோரிக்கை தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு மலேசிய மருத்துவர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு நிறுவனமாக சொக்சோவை மோசடி செய்யும் வகையில் மருத்துவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவம் குறித்து மலேசிய மருத்துவர் சங்கம் கவலை அடைவதாக அதன் புதிய தலைவர்
டாக்டர் கல்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மருத்துவதுறையை சார்ந்தவர்கள், தாங்கள் கொண்டுள்ள தொழில் நன்னெறியை மீறி இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் செயல்களை மலேசிய மருத்துவர் சங்கம் கடுமையாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் முழுமையாக விசாரணை தேவை என்று டாக்டர் கல்விந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். சொக்சோ இழப்பீட்டு கோரிக்கை மோசடி தொடர்பில் பினாங்கை சேர்ந்த 5 மருத்துவர்களையும், இதர 30 பேரையும் SPRM கைது செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS