மாதுவிற்கு 700 வெள்ளி அபராதம்

செரம்பன்,செப்டம்பர் 09-

தனது 10 வயது மகளை கார் ஓட்டுவதற்கு அனுமதித்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 700 வெள்ளி அபராதம் விதித்தது.

42 வயதுடைய அந்த மாது, தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் மார்லிசா முகமது ஃபஹ்மி அபராதத் தொகையை வித்ததார்.

அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் 7 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் மார்லிசா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த செப்டம்ர் 3 ஆம் தேதி இரவு 9 மணியளவில் சிரம்பான், தமன் அரோவானா, ஜாலான் அரோவானா 2இல் அண்டை வீட்டைச் சேர்ந்த சிறுவனை அழைத்துக்கொண்டு அந்த பத்து வயது சிறுவன் Toyota Corolla காரில் வலம் வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த சிறுவன் காரை செலுத்தும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாதைத் தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடத் தொடங்கினர்.

WATCH OUR LATEST NEWS